இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் ரேவதி?
ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்கி வருகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.
அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்ததாகவும் தற்போது முக்கியமான காட்சிகளை படப்பிடிப்பு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, ரேவதி நடிகர் விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் அவர் இணைந்திருப்பது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!