செய்திகள் :

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

post image

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அமித்ஷாவை ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள்.

அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி மதிக்கக்கூடியவர். மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். இபிஎஸ்ஸிடம் செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என்று செய்திகள் வந்ததா?. அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று. ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள். த.வெ.க விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும், மக்கள் தான் எஜமானர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 1000 கருத்துக் கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.

எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாக தான் உள்ளோம். எடப்பாடி பழனிசாமி மிகவும் சரியாக உள்ளார்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க