செய்திகள் :

விடுதலை 2: வெற்றி விழா விடியோ வெளியிட்ட படக்குழு!

post image

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

விடுதலை - 2 திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட விடுதலை - 2 குழுவினர் இணைந்து நேற்று கொண்டாடினர்.

இந்த நிலையில் அதன் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, வெற்றி மாறனுக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நி... மேலும் பார்க்க

உன்னி முகுந்தனின் மார்கோ ரூ. 100 கோடி வசூல்!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது. அதிக வன்மு... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டின் கடைசி போட்டியாளர், இப்போது முதலிடத்தில்!

பிக் பாஸ் வீட்டில் கடைசியாக, 24வது போட்டியாளராகக் கலந்துகொண்ட ரயான், பிக் பாஸ் வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையே இறுதி சுற்றுக்குத் தேர்வாகும் போட்டிகள் நிறை... மேலும் பார்க்க

முபாசா இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்!

முபாசா திரைப்படம் இந்தியளவில் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தி லைன் கிங் (the lion king) திரைப்படம் 2019 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்... மேலும் பார்க்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூடத்தில் விஜய் சேதுபதியின் நண்பர் கலந்துகொண்டார். அவரைக் கண்டதும் விஜய் சேதுபதி அவருடனும் அவரின் குடும்பத்தாருடனும் உரையாடிய விதம் பலரைக் கவர்ந்துள்ளது. பிக் பா... மேலும் பார்க்க

பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்தியளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், க... மேலும் பார்க்க