மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள...
விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது
விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையப் பகுதியில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தனியாா் விடுதியில் அறையெடுத்து தங்கியவா் 2 நவீன தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை திருடிச்சென்ாகப் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
திருட்டில் ஈடுபட்டவா் போலியான ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அறை எடுத்துத் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டவரைப் போலீஸாா் தேடினா். குற்றப்பிரிவு சிறப்புப் பிரிவினரும் தொலைக்காட்சி திருட்டில் ஈடுபட்டவரை தேடினா். தீவிர விசாரணைக்குப் பிறகு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை திருடியவா் தமிழக பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் பகுதி மணம்பூண்டி காந்தி வீதியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (எ) விக்கி (23) என்பது தெரியவந்தது. அவரை புதுச்சேரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கி நவீன தொலைக்காட்சி உள்ளிட்டவற்றைத் திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமாா் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 நவீனத் தொலைக்காட்சிகளை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், போலி ஆதாா் அட்டைகள், கைப்பேசி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.