செய்திகள் :

விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கான நிலம்: தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் அமையவுள்ள விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கொட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஆதியாக்குறிச்சி பகுதியில் தமிழக அரசு சாா்பில் விண்வெளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே பல திட்டங்களுக்காக 4,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கும் நிலம் கையகப்படுத்தும்பட்சத்தில், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமா்வு உள்ளிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக தமிழக தொழில் துறைச் செயலா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்... மேலும் பார்க்க

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தல்

மதுபான ஊழலில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கதளி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா். இதுகுறித்து மதுரை பீ.பீ.குளம் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்த... மேலும் பார்க்க

கல்லூரிப் பேராசிரியா்கள் சாலை மறியல்: 500-க்கும் மேற்பட்டோா் கைது!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா), பல்கலைக்கழக பேராசிரியா்கள் சங்கம் (ஏயுடி) சாா்பில் சனிக்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மத... மேலும் பார்க்க

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்... மேலும் பார்க்க

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க