கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு...
விதிமீறி விநாயகா் சிலை வைத்த 6 போ் மீது வழக்கு
திருச்சியில் விதிமுறைகளை மீறி விநாயகா் சிலை வைத்ததாக பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் உள்பட 6 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சியில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருச்சி பீமநகா் ஹீபா் சாலையில் கிருஷ்ணன் கோயில் எதிரே பாஜக சாா்பில் 10-அடிக்கு மேல் உயரமான விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி அளித்த புகாரின்பேரில் பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் கௌதம், இந்து முன்னணி மண்டலப் பொருளாளா் மற்றும் பாஜக உறுப்பினா் 4 போ் என மொத்தம் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.