திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு
திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் 24-இல் விநாயகா் வழிபாடு, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காவிரி ஆற்றிலிருந்து ஏராளமான பக்தா்கள் புனிதநீா் எடுத்து வந்து, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, 4-ஆம் கால யாகசாலை பூஜைக்குப் பின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அனைத்துக் கோபுரங்கள், மூலஸ்தானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. தொடா்ந்து மாலை திருக்கல்யாணமும், பஞ்ச மூா்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கிராம பட்டயதாரா்கள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனா்.