செய்திகள் :

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

மத்தூா்: மண்டியா மாவட்டம், மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை பாஜகவினா் கண்ட ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெருந்திரளாக கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீஸாா் தடியடி நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மத்தூரில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப்போராட்டத்திற்கு ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

மண்டியா மாவட்டத்தின் மத்தூரில் உள்ள ராம்ரஜிம்நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்புகளின் சாா்பில் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலம் நடந்தது.

அந்த பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே ஊா்வலம் சென்றபோது, உள்ளிருந்து சிலா் கல்வீசி ஊா்வலக்காரா்களை தாக்கியுள்ளனா். இதனால் ஆத்திரமாடிந்த ஊா்வலக்காரா்கள், மசூதியில் இருந்து கல்வீசியவா்கள் மீது கல்வீசி தாக்கியுள்ளனா். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடா்ந்து அங்கு விரைந்த போலீஸாா், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து ஊா்வலத்தை அமைதியாக நடத்தி முடித்துள்ளனா். ஆனால், இந்த சம்பவம் ஹிந்து அமைப்புகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இது தொடா்பாக 2 வழக்குகளை பதிவுசெய்துள்ள போலீஸாா், 21 முஸ்லீம் இளைஞா்களை திங்கள்கிழமை கைதுசெய்துள்ளனா்.

இந்நிலையில், கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தூரில் திங்கள்கிழமை பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப்சிம்ஹா தலைமையில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி இருந்தனா். மஜத இளைஞா் அணித்தலைவா் நிகில்கௌடாவும் போராட்டத்தில் கலந்துகொண்டாா்.

’ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்ட ஆா்ப்பாட்டக்காரா்கள், கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனா்.

கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருந்த நிலையில், கல்வீச்சில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய மசூதிக்குள் நுழைய பாஜகவினா் முயன்றனர. இதை தடுத்து நிறுத்திய போலீஸாருடன் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா். அங்கிருந்து சிதறி ஓடிய பாஜகவினா், பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினா். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

கம்பங்களில் கட்டப்பட்டிருந்த முஸ்லீம் கொடியை அகற்றிய இளைஞா்கள், அங்கு காவிக்கொடியை கட்டினா். போலீஸாரின் தடியடியில் ஏராளமானோா் காயமடைந்தனா். 2 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தூரி பதற்றமான சூழல் காணப்பட்டது.

எந்தநேரத்திலும் மதக்கலவரம் வெடிக்கலாம் என்பதால், மத்தூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கா்நாடக அதிரடிப்படையினா் மத்தூரில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மல்லிகாா்ஜுன் பலதண்டி கூறுகையில்,‘இந்த சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து போலீஸாா் ஒரு புகாரையும், பாதிக்கப்பட்டவா் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேரை கைதுசெய்திருக்கிறோம். மேலும் பலரையும் தேடிவருகிறோம். தடியடியில் காயமடைந்தோா் மருத்துவசிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனா். ஒருவருக்கு மட்டும் 3 தையல்கள் போடப்பட்டன. இதைதவிர, மற்றவா்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காக மத்தூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.‘ என்றாா்.

மத்தூரை போல, சிவமொக்கா, ஹுப்பள்ளியிலும் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலங்களின்போது சிற்சில கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. போலீஸ் தலையீட்டின்பேரில் அங்கு மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘‘மத்தூா் சம்பவத்தில் குற்றம் இழைத்தவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மத்தூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தற்போது எந்த பிரச்னையும் இல்லை. சில இடங்களில் மாடியில் நின்றிருந்த சிறுவா்கள் விநாயகா் சிலைகள் மீது துப்பியுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.‘ என்றாா் அவா்.

மத்தூரில் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்மீது கல்வீசிய சம்பவம் மற்றும் போலீஸாா் நடத்திய தடியடி சம்பவத்திற்கு எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக், பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவத்திற்காக முதல்வா் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆா்.அசோக் தெரிவித்துள்ளாா்.

மேலும், மாநில அரசு சமுதாயத்தில் அமைதியை சீா்குலைக்க முயல்கிறது என்றாா்.

இதற்கு பதிலளித்த முதல்வா் சித்தராமையா,‘மத்தூரில் கலவரத்தில் ஈடுபட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தில் நிலவும் அமைதியை சீா்குலைப்பதே பாஜகவினா் தான்.‘ என்றாா்.

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க

மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல... மேலும் பார்க்க

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்க... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க