செய்திகள் :

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 3

post image

1. பின்வருவனவற்றைப் பொருத்துக

(a) காரோ 1. அஸ்ஸாம்

(b) கூகி 2. மிசோரம்

(C) தோடர் 3. தமிழ்நாடு

(d) மிரி 4. அருணாச்சலப் பிரதேசம்

(a) (b) (c) (d)

(A) 2 4 1 3

(B) 1 2 4 3

(C) 1 2 3 4

(D) 2 4 3 1

2. அமராவதியிலுள்ள ஸ்தூபி எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு?

(A) நகரப்பாணிக் கட்டிடக்கலை

(B) வேசரப்பாணிக் கட்டிடக்கலை

(C) முகலாயக் கட்டிடக்கலை

(D) திராவிடக் கட்டிடக்கலை

3. சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. அரிஷ்-ஐ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்

2. முஷ்ரிப்-ஐ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்

3. தாபிர்-ஐ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்

4. முஷ்தவ்பி-ஐ-முமாலிக் - தலைமைத் தணிக்கையாளர்

(A) 1, 2 மற்றும் 3 மட்டும்

(B) 2, 3 மற்றும் 4 மட்டும்

(C) 1, 2 மற்றும் 4 மட்டும்

(D) 1, 3 மற்றும் 4 மட்டும்

4. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறியவும்.

1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது.

2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்

3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.

4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.

(A) 1 மற்றும் 4 மட்டும் தவறு

(B) 1 மற்றும் 3 மட்டும் தவறு

(C) 2 மற்றும் 3 மட்டும் தவறு

(D) 3 மற்றும் 4 மட்டும் தவறு

5. எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?

(A) பத்தாவது

(B) பன்னிரண்டாவது

(C) பதினான்காவது

(D) இருபத்தியிரண்டாவது

6. கீழ் உள்ளவற்றைக் காலவரிசைப்படுத்துக:

1. சர்க்காரியா ஆணையம்

2. பல்வந்த்ராய் மேத்தா குழு

3. ராஜமன்னார் குழு

4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்

(A) 2, 3, 1, 4

(B) 2, 4, 3, 1

(C) 2, 4, 1, 3

(D) 4, 2, 3, 1

7. கீழே கொடுக்கப்பட்டுள்ள எது/எவை சரியானது?

1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948

2. விதி 10இன்படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்

3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது

4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது

(A) 1,2, 3 மற்றும் 4

(B) 1, 2 மற்றும் 3

(C) 1 மற்றும் 4

(D) 1, 2 மற்றும் 4

8. இந்தியாவின்யூனியன் பிரதேசங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.

2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.

3. முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர்ஆகும்.

4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.

(A) 1,2 மற்றும் 4 சரி

(B) 1 மற்றும் 3 சரி

(C) 2 மற்றும் 4 சரி

(D) 2, 3 மற்றும் 4 சரி

9. கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

1. ஷரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.

2. ஷரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்

3. ஷரத்து 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

4. ஷரத்து 360 - நிதி ஆணையம்

(A) 1 மட்டும்

(B) 3 மட்டும்.

(C) 1, 2 மற்றும் 3 மட்டும்

(D) 4 மட்டும்

10. கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது

(i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்

(ii) அரசியலமைப்பின் மனசாட்சி

(iii) அரசியலமைப்பின் ஆன்மா

(iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (iii) மட்டும்

(D) (i), (ii), (iii) மற்றும் (iv)

11. மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக :

பொருள் அரசமைப்புவிதி எண்

(a) ஆளுநருக்கு உதவி மற்றும்

ஆலோசனைகூறும் அமைச்சர் குழு 1. 164

(b) அமைச்சர்கள் தொடர்பான பிற

அம்சங்கள் 2. 166

(c) மாநில அரசாங்கத்தின் அலுவலை

நடத்துதல் 3. 167

(d) மாநில ஆளுநருக்குத் தகவல்

தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின்

பணிகள் 4. 163

(a) (b) (c) (d)

(A) 1 3 2 4

(B) 2 4 1 3

(C) 3 2 1 4

(D) 4 1 2 3

12. கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :

குழு ஆண்டு

(a) தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான

கோஸ்வாமி குழு 1. 1993

(b) வோரா குழு அறிக்கை 2. 1998

(c) அரசின்நிதியளிப்பு மூலமாகத்

தேர்தல்கள் பற்றிய இந்திரஜித்

குப்தா குழு 3. 2008

(d) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த

ஆணையம் 4. 1990

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 3 2 1 4

(C) 2 4 3 1

(D) 4 1 2 3

13. மாநில ஆளுநரின் “நீதிமன்றஅதிகாரம்" குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருதுக. விருப்பத்தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று : மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.

காரணம் : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.

(A) [A] சரி [R] தவறு

(B) (R சரி [A] தவறு

(C) [A]-வும் [R]-வும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது

(D) (A) மற்றும் [R) இரண்டும் சரி; [R] என்பது [A)-க்குச் சரியான விளக்கமாகும்

14. ஓர் உயிரி தனது புதிய வாழிடத்தில் தன்னை விரிவுபடுத்தும் செயல் என்பது

(A) நிலைப்படுத்துதல்

(B) புலப்பெயர்ச்சி

(C) குடியிறக்கம்

(D) சகவினை

15. வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடர்த்தியை அளவிட உபயோகிக்கும் கருவி

(A) டோப்சோன் மீட்டர்

(B) ரோ மீட்டர்

(C) ஹைக்ரோ மீட்டர்

D) அனிமோ மீட்டர்

16. லண்டன் பாலம் நடவடிக்கை என்பது

(A) மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்

(B) UK பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கானசெயல்முறை

(C) NATO நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி

(D) ரஷ்ய-உக்ரைன் போரின்போது வெளியேற்றல்

17. பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY) இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?

(A) சுகாதாரச் சேவை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை கிராமப்புற மகளிருக்கு வழங்க வேண்டும்

(B) அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்

(C) சுத்தமான தண்ணீர்மற்றும் சுற்றுச்சூழலை வழங்க வேண்டும்

(D) சுத்தமான உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்

18. VVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது

(A) வாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை

(B) வாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை

(C) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை

(D) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்குநடைமுறை

19. கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

(a) நாயக்குழு 1. அமைப்பு சாரா துறை

(b) தாராபூர் குழு 2. மத்திய-மாநில தொடர்பு

(c) இராஜமன்னார் குழு 3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு

கடன்கிடைப்பது (d) அர்ஜூன்சென்குப்தா குழு 4. மூலதன கணக்கு மாற்றுத் திறன்

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B) 1 2 4 3

(C) 3 4 2 1

(D) 3 2 1 4

20. கூற்று [A] : இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் - “பெரிய பாலைவனம்" மற்றும் "சிறிய பாலைவனம்".

காரணம் [R] : இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது.

A) [A] கூற்று சரி ஆனால் [R] காரணம் தவறு

(B) [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி

(C) [A] கூற்று தவறு, [ R] காரணம் சரி

(D) [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, ஆனால் [A] கூற்றுக்கான காரணம் [R] தவறு

21. மூவலூர் இராமாமிருதம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்

(A) அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள்

(B) 1 முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவியர்

(C) 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற இளம்பட்ட வகுப்பு பயிலும் மாணவியர்

(D) பள்ளிக்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவியர் மட்டும்

22. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?

(A) UV-А

(B) UV-С

(C) ஓசோன் படலம்

(D) மேல் உள்ளவை அல்ல

23. M.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?

(A) ஹைதராபாத்

(B) ஜோத்பூர்

(C) மைசூர்

(D) குவாலியர்

24. “எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுக்களில் எது சிறப்பாக விளக்குகிறது?

I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது

(A) I மட்டும்

(B) I, II மற்றும் III மட்டும்

(C) II மற்றும் IV மட்டும்

(D) I மற்றும் IV மட்டும்

25. கூற்று [A] : இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள்' பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.

காரணம் [R] : பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.

(A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

(B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] -க்கான சரியான விளக்கமாகும்.

(C) கூற்று[A] தவறு காரணம் [R] சரி

(D) கூற்று[A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல

விடைகள்

1. (C) 1 2 3 4

2. (D) திராவிடக் கட்டிடக்கலை

3. (C) 1, 2 மற்றும் 4 மட்டும்

4. (D) 3 மற்றும் 4 மட்டும் தவறு

5. (C) பதினான்காவது

6. (B) 2, 4, 3, 1

7. (C) 1 மற்றும் 4

8. (B) 1 மற்றும் 3 சரி

9. (D) 4 மட்டும்

10. (D) (i), (ii), (iii) மற்றும் (iv)

11. (D) 4 1 2 3

12. (D) 4 1 2 3

13. (C) [A]-வும் [R]-வும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது

14. (A) நிலைப்படுத்துதல்

15. (A) டோப்சோன் மீட்டர்

16. (A) மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்

17. (B) அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்

18. (C) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை

19. (C) 3 4 2 1

20. (B) [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி

21. (C) 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற இளம்பட்ட வகுப்பு பயிலும் மாணவியர்

22. (C) ஓசோன் படலம்

23. (C) மைசூர்

24. (D) I மற்றும் IV மட்டும்

25. (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] -க்கான சரியான விளக்கமாகும்

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2

1. கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்(A) இவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன(B) இவ... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... பாளையக்காரர்கள் புரட்சி! - 2

1. காளையார்கோவில் அரண்மணை தாக்கப்பட்ட ஆண்டு?(a) 1772(b) 1773(c) 1775(d) 17802. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?(a) நாகலாபுரம் போர்(b) களக்காடு போர்(c) காளையார்கோவில் போர்(d) மைசூர் போர்3. த... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்!

1. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக்காரணமாக இருக்கிறது?(A) கரியமில வாயு(C... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி.... பாளையக்காரர்கள் புரட்சி!

1. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?(a) பாளையம்(b) சேவகர்கள்(c) போலிகார்(d) இவற்றில் எதுவுமில்லை2. பாளையக்காரர் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய அரசு?(a) காகதீய அரசு(b) விஜயநகர அரச... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... குப்தர்கள்! - 3

1. சமுத்திரகுப்தர் என அழைக்கப்படும் குப்த அரசர் யார்?a) முதலாம் சந்திரகுப்தர்b) இரண்டாம் சந்திரகுப்தர்c) ஸ்ரீகுப்தர்d) குமாரகுப்தர்2. குப்த அரசர்களின் அரசமரபு எது?a) குடியாட்சிb) அரசவாரிசு முறைc) ஜனநா... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... குப்தர்கள்! - 2

1. முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை தெற்கில் எங்கு வரை விரிவித்தார்?a) தமிழகம்b) வங்காளம்c) விந்தியா மலைd) ஹிமாசல பகுதி 2. சமுத்திரகுப்தர் மேற்கொண்ட தெற்குப் படையெடுப்பின் தனிச்சிறப்பு என்ன?a) எல்... மேலும் பார்க்க