விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த பிரேம் குமாா் மனைவி சிம்ரன் (20). இவா் கடந்த ஏப்.22-ஆம் தேதி ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
தோட்டாளம் கிராமத்தருகே சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழுந்தாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.