கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநி...
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், கொடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (50). கூலித் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம்- மதுரை சாலையில் கடந்த 10-ஆம் தேதி சென்றாா்.
கொடிமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த முருகேசனை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.