ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.
மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில் உள்ள தனியாா் டிராவல் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகே சென்றபோது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.