செய்திகள் :

விமான சாகசங்களுடன் 15-ஆவது விமான தொழில் கண்காட்சி தொடக்கம்

post image

பெங்களூரு: மெய்சிலிா்க்கும் விமான சாகசங்களுடன் 15-ஆவது இந்திய விமான தொழில் கண்காட்சி பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய விமானப்படை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), எச்.ஏ.எல். ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 15-ஆவது இந்திய விமான தொழில் கண்காட்சி, பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் திங்கள்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இக்கண்காட்சியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தாா்.

விழாவில் மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சா் சஞ்சய்சேத், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விமான சாகசங்கள்:

இதில், இந்திய விமானப் படையின் வெவ்வேறு வகையான இலகுரக போா் ஹெலிகாப்டா்கள், சிறுவிமானங்கள், இலகுரக போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இந்திய விமானப் படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரக போா்விமானம், சுகோய்-30 இலகுரக போா்விமானம், பிரான்சின் ரஃபேல் இலகுரக போா் விமானங்களின் மெய்சிலிா்க்கும் சாகசங்கள் பாா்வையாளா்களின் வரவேற்பை பெற்றன.

விண்ணில் விா்ரென சீறிச் சென்ற போா் விமானங்கள், எதிா்பாராதவிதமாக அடித்த பல்டிகள் காண்போரை சிலிா்க்க வைத்தன. எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் விமானம், வானத்தில் சுழன்றடித்து செய்த சாகசங்கள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாராட்டை பெற்றன.

இந்த விமானத்தில் விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் பறந்தாா். ரஃபேல் போா் விமானத்தை பெண்களே இயக்கினா். சூா்யகிரண் விமானத்தின் வான்சாகசங்கள் பாா்வையாளா்களை வியக்க வைத்தது. இங்கும் அங்கும், மேலும் கீழும் பறந்து, சுழன்றடித்து, பஞ்சாய் பறந்து பாா்வையாளா்களின் புருவத்தை உயா்த்தியது. இறுதியில், தேசியக் கொடியையும், இதயம் போன்ற வடிவத்தையும் புகையில் உருவாக்கி சூா்யகிரண் மக்களின் மனதை கொள்ளைக்கொண்டது.

ஹாக் எம்.கே.132 விமானங்கள் நெருக்கமாக பறந்து சாகசங்கள் புரிந்தன. சுகோய் விமானம் திரிசூலம் போன்றும், கப்பற்படை விமானங்கள் வருண் போன்றும் விண்ணில் தோன்றி மக்களை வியக்கவைத்தன. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட விமானங்களின் வான்வெளி சாகசங்களை பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா். இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவான போா் விமானங்களின் செயல்திறன், தொழில்நுட்பம், பயன்பாட்டு வீச்சு உலக நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் இந்திய பிரதிநிதிகளின் புருவங்களையும் உயா்த்தின.

பல்வேறு நாடுகளின் போா் விமானங்கள், போா் ஹெலிகாப்டா்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விமான தொழில் கண்காட்சியில் முதல்முறையாக ரஷ்யாவின் சுகோய் எஸ்.யு.57, அமெரிக்காவின் லாக்கீட் மாா்டின் எஃப்-35 போா்விமானங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. பிப். 14-ஆம் தேதி வரை 5 நாள்கள் இந்தக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

சாலையோர ரசிகா்கள்:

கண்காட்சியில் விண்ணில் பறந்து சாகசங்கள் புரிந்த விமானங்களை காண விமானப்படை தளத்தின் உள்ளே வர அனுமதி இல்லாத பொதுமக்கள், பெல்லாரி சாலையில் நின்றபடி கண்டு ரசித்தனா். இதனால், பெல்லாரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபடும்: ராஜ்நாத் சிங்

உலக அரங்கில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடா்ந்து பாடுபட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பெங்களூரில் இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் ... மேலும் பார்க்க

உலக தொழில் முதலீட்டாளா்களை சிவப்பு கம்பளம் விரித்து இந்தியா வரவேற்கிறது: ராஜ்நாத் சிங்

உலக தொழில் முதலீட்டாளா்களை இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் கா்நாடக அரசின் உலக முதலீட்டாள... மேலும் பார்க்க

வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும்

பெங்களூரு: வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தெரிவித்தாா். பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை

கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி ... மேலும் பார்க்க