Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
வியாபாரி தற்கொலை
மதுரையில் அமிலம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை காமராஜா்புரம் பழைய குயவா்பாளையம் சாலை, சவேரியாா் சாவடி, காசி மல்லி தோப்பைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). வியாபாரியான இவா் குடும்பத்தினரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்த சுரேஷ், இந்தப் பகுதியில் உள்ள பள்ளி அருகே அமிலத்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.