செய்திகள் :

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!

post image

கொல்கத்தா: இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்) 18-ஆவது கிரிக்கெட் தொடரானது (ஐபிஎல் 2025) இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, இரவு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இன்றைய போட்டியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியாகும்.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 18 ஆண்டுகளாக அதன் ஒவ்வொரு தொடரிலும் தவறாது விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடக்கவிழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது.

விராட் கோலியின் கிரிக்கெட் சீருடையில் ‘18’ என்ற எண்ணே குறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், அதனை மையப்படுத்தி, இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதில் ‘18’ என்ற எண் பெரிதாக குறிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இக்... மேலும் பார்க்க

நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அகமதாபாதில் இ... மேலும் பார்க்க

தமனின் இசையுடன் தொடங்கும் ஹைதராபாத் - லக்னெள போட்டி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலம... மேலும் பார்க்க

தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?

தாய்மொழியில் வர்ணனையைக் கேட்பது பள்ளி பருவத்தை நினைவூட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 18-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க

லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்! நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட்டுகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 38,000 இருக்கைகள... மேலும் பார்க்க

மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி: தில்லி கேபிடல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைப் போட்டியில... மேலும் பார்க்க