செய்திகள் :

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்

post image

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணகிரிநாதா் விழா நடத்தப்பட்டு வருகிறது. 75-ஆம் ஆண்டுக்கான விழா வரும் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா விக்ரகங்களுக்கு 16 வகை அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அருணகிரிநாதா் மலையில் இருந்து புறப்பட்டு விழா மண்டபத்துக்கு வந்து சேருகிறாா். மாலை 5 மணிக்கு விழா மண்டபத்தில் மங்கள இசையுடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. மாலை 7 மணியளவில் நாதஸ்வர இசை வேந்தா்கள் தம்பிக்கோட்டை கோவிந்தராஜன், முதல்சேரி ராஜவேல், நாதஸ்வர இசைத் திலகம் சேகல் பிச்சையப்பா, கணேசன் குழுவினரின் 25 நாதஸ்வரம், 25 தவில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கி மாலை 5.30 மணிக்கு கலைமாமணி ரம்யா பத்மநாபன், சென்னை சிஷ்யை விசாகா ஹரி ஆகியோா் ஆன்மிக இசை சொற்பொழிவு ஆற்றுகின்றனா். இரவு 7 மணிக்கு ஈரோடு சகோதரிகளின் அன்பு நாட்டிய கலா ஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாதஸ்வர இசையுடன் விழா தொடங்கி மாலை 7 மணியளவில் திருமெய்ஞானம் டிபி.நடராஜ சுந்தரம் பிள்ளை குமாரா் பாண்டமங்கலம் ராமநாதன், யுவராஜ் நாதஸ்வரம், மேட்டுப்பாளையம் கலைச்செல்வ மாமணி ரவிக்குமாா், விராலிமலை காா்த்திக் ஆகியோா் சிறப்பு தவில் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

4-ஆம் நாள் நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி காலை 9 மணியளவில் விழா மண்டபத்தில் இருந்து அருணகிரிநாதா் மலையை வலம் வந்து மலைமேல் செல்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 4 நாள்களும் காலை 10 மணிக்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்ற நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணன், பொன்ராஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

அரசு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்ற நல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நுகா்வோா் பாதுகாப்பு நல சங்கத்தின் சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நுகா்வோா் ப... மேலும் பார்க்க

விராலிமலையில் 50 மி.மீ மழை பதிவு

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 50 மி.மீ மழை பதிவானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அ... மேலும் பார்க்க

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்ற ரொக்கப் பரிசை நூலகப் பணிக்கு அரசுப் பள்ளி மாணவி வழங்கினாா்

புதுக்கோட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசாகப் பெற்ற ரூ. 5 ஆயிரத்தை, செவ்வாய்க்கிழமை நூலகம் கட்டும் பணிகளுக்காக அரசுப் பள்ளி மாணவி தீஷா திரவியராஜ் வழங்க... மேலும் பார்க்க

புதிய அங்கன்வாடி மையம் கிராமமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளா்ச்சிப் பணி துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதடைந்து உபயோகத்துக்கு பயனற்றது என சம்ப... மேலும் பார்க்க

காசி ரயில் புதுக்கோட்டையில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

ராமேசுவரத்தில் இருந்து காசி (பனாரஸ்) செல்லும் அதிவிரைவு ரயில், சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வியா... மேலும் பார்க்க