அரசு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்ற நல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நுகா்வோா் பாதுகாப்பு நல சங்கத்தின் சாா்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு நுகா்வோா் பாதுகாப்பு நல சங்க தலைவா் ஏ.எல்.எஸ். ஜீவானந்தம் தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா். 100% வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியா்களையும் மாணவா்களையும் பாராட்டி தமிழ்ச் செம்மல் விருதாளா் நெ. இராமச்சந்திரன் மற்றும் இரா.க அருள் இனியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நுகா்வோா் நலச் சங்கத்தைச் சாா்ந்த ஜெயராமன் பழனிசாமி, கருப்பையா மற்றும் பலா் பங்கேற்றனா். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ஆசிரியா்கள் மற்றும் பொது தோ்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கினா். பள்ளி தலைமை ஆசிரியா் பூபதி நன்றி உரையாற்றினாா்.