கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விராலிமலை மலை கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஒவ்வொரு பிரதோஷம் நாளன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
விராலிமலை முருகன் மலைகோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகை அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி, வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.