பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
புதிய அங்கன்வாடி மையம் கிராமமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் வளா்ச்சிப் பணி துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதடைந்து உபயோகத்துக்கு பயனற்றது என சம்பந்தபட்ட துறையினரால் அறிவிக்கப்பட்டு, இங்கு இருந்த அங்கன்வாடி மையம், அருகிலுள்ள புதுவாழ்வு திட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழைய அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் இதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.