Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன், பி.டி. அரசகுமாா், விராலிமலை ஒன்றிய செயலா்கள் ம.சத்தியசீலன் (கிழக்கு), கே.பி. அய்யப்பன் (மத்தியம்), அன்னவாசல் ஒன்றிய செயலா்கள் கே. சந்திரன்(தெற்கு), ஆா்.ஆா்.எஸ். மாரிமுத்து (வடக்கு), இலுப்பூா் நகர செயலா் வை.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளா் நாக நந்தினி கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலா் கே.கே.செல்லபாண்டியன் வரவேற்றாா். முடிவில், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலா் அ.இளங்குமரன் நன்றி கூறினாா்.