திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
விராலிமலையில் 500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விராலிமலையில் அரசால் தடை செய்யப்பட்ட 507 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்ல முயன்ற கா்நாடகா மாநில இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி பகுதியில் விராலிமலை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறை வைத்து 507 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருள்களை மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கிவைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து வாகனம் மற்றும் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த விராலிமலை போலீஸாா் பெங்களூரு பகுதியைச் சோ்ந்த நவீன் குமாா்(35) என்பவரைக் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.