தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
விருது பெற்ற கண் மருத்துவருக்கு வாழ்த்து
சிறப்பாக பணியாற்றி விருது பெற்ற காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவா் அனந்தலட்சுமி வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியரிடம் விருதைக் காட்டி வாழ்த்து பெற்றாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்து வருபவா் ரா.அனந்தலட்சுமி. இவா், காஞ்சிபுரம் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புப் பிரிவு திட்ட மேலாளராகவும் பணியாற்றி வந்தாா். கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததில் முக்கியப் பங்காற்றியது உள்பட கண் மருத்துவத்தில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் விருதை அளித்துப் பாராட்டினாா்.
இந்த விருதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் காட்டி வாழ்த்துப் பெற்றாா். நிகழ்வின்போது மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநா் சரவணன், மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.