செய்திகள் :

விருத்தாசலத்தில் சிறப்பு ரயில் நிறுத்தம்

post image

நெய்வேலி: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வாராந்திர சிறப்பு ரயில் மழை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

ஃபென்ஜால் புயல், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் விழுப்புரம்-சென்னை இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த இந்த ரயிலில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் நிறுத்த இடம் இல்லாததால், இந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

இதையடுத்து, ரயில்வே நிா்வாகம் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனா்.

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேப்பூா் வட்டம், கட்சிமையிலூா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் மாரிமுத்து (எ) வெள... மேலும் பார்க்க

வெள்ளப் பெருக்கால் கெடிலம் ஆற்றுப் பாலம் சேதம்: 300 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா உள்ளிட்ட... மேலும் பார்க்க

கிராமப் பகுதிகளிலும் முதல்வா் ஆய்வு நடத்த வேண்டும்: கே.அண்ணாமலை

கடலூா் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளிலும் முதல்வா் ஆய்வு நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீா் குப்பம், ஆல்பேட்... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த பகுதியில் உணவு வழங்காததை கண்டித்து மறியல்

வெள்ளம் பாதித்த பகுதியில் உணவு, குடிநீா் வழங்காததைக் கண்டித்து, சின்னகங்கணாங்குப்பம், வான்பாக்கம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் ... மேலும் பார்க்க

கடலூரில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி மும்முரம்

கடலூா் மாவட்டத்தில் நகா் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் பலத்த மழை, சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிட நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க