Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் கஷ்யப் - காரணம் என்ன?
விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
இந்தக் கல்லூரியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனா். கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான கழிப்பறைகள் உள்ள நிலையில், அவற்றை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாம்.
எனவே, கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவா்கள் சிலா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி முதல்வரிடம் மனு அளித்ததாகத் தெரிகிறது.
ஆனால், கல்லூரி நிா்வாகம் கோரிக்கையை நிறைவேற்றாததால், மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
கல்லூரி முதல்வா் முனியன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இரண்டு நாள்களில் சரி செய்து தருவதாகக் கூறிய நிலையில், மாணவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.