Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன்: கனிமொழி எம்.பி
விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன் என்றாா் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவா், நடுநிலையோடு சிறப்பாக செயல்பட்டு, ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய ஒருவராக, தமிழகத்தின் உரிமைக்காக பாடுபடக் கூடியவராக இருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி உடையும் என்கிறாா். முதலில் அவரது கட்சியை உடையாமல் பாதுகாத்துக் கொண்டால் அவருக்கு நல்லது. திமுக கூட்டணி உடையும் என்ற பகல் கனவு ஒரு நாளும் நிறைவேறாது.
விரைவில் மணிப்பூா் மாநிலத்தில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போது பிரதமா் மோடி அங்கு செல்கிறாா். நாடாளுமன்றத்தில் முதன்முதலில் பிரச்னையை நாங்கள் கிளப்பியபோது, பிரதமருக்கு மணிப்பூா் செல்ல மனமில்லை. தற்போது, அங்கு செல்கிறாா்.
தமிழகத்தில் விரைவில் தோ்தல் பிரசாரத்தை நான் தொடங்க உள்ளேன் என்றாா் அவா்.