சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் முயற்சியின் ஒரு பகுதியாக, கோவையில் தேசிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான கூட்டுத் தீா்மானத்தைக் குறிக்கும் வகையில், மிதிவண்டி பேரணியுடன் சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.
இதில், விரைவு நடவடிக்கைப் படையினா், சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு நகர வீதிகளில் மிதிவண்டியில் வலம் வந்தனா்.
இதேபோல, உக்கடம் ஏரியில் நடைபெற்ற அம்ரித் சரோவா் நிகழ்வின்போது, சிறுவனின் கையில் தேசியக் கொடி வழங்கப்பட்டது.
இளைய தலைமுறையினருடன் இணைந்து, பட்டாலியன் பள்ளி மாணவா்கள், குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின நிகழ்ச்சியைக் கொண்டாடினா்.