செய்திகள் :

விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்: நடிகர் மாதவன்

post image

ஹிசாப் பராபர் படத்தின் புரோமோ நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் அஜீத் குமார் குறித்து நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அஷ்வனி தீர் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், நீல் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹாரி, ரஷாமி தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிசாப் பராபர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கான புரோமோ நிகழ்ச்சியின்போது, தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

மேலும், இந்தப் பேட்டியில் நடிகர் அஜீத் குமார் குறித்தும் நடிகர் மாதவன் பாராட்டிப் பேசினார். நடிகர் அஜீத் குறித்து மாதவன் கூறியதாவது, ``நடிகர் அஜீத் ஒரு பந்தய வீரர். அவருக்கு பைக்குகள் குறித்து நன்கு தெரியும். அவர் ஈடுபடும் அனைத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார். அவர், அனைத்திலும் அளவுடனேயே பேசுவார்.

அதுமட்டுமின்றி, சினிமா வரலாற்றில், தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லாத ஒரே சூப்பர் ஸ்டார் அஜீத் குமார் மட்டுமே. இது நம்ப முடியாததுதான். அவரின் படங்கள் அஜீத் குமாரின் படங்கள் என்ற பெயரிலேயே அதிகம் பேசப்படுகின்றன.

இதையும் படிக்க:குடும்பஸ்தன் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!

அவர், தனது திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் எதுவும் செய்வதில்லை; நேர்காணல்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இதுபற்றி ஹிந்தி நடிகர்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

துபையில் ஜனவரி 11 ஆம் தேதியில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 911 GT3 R பிரிவில், நடிகர் அஜீத் குமாரின் குழுவான அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர். இந்தக் கார் பந்தயத்தைக் காணச் சென்ற நடிகர் மாதவன், வெற்றிபெற்ற அஜீத் குமாரை ஆரத் தழுவி, வாழ்த்து தெரிவிக்கும் விடியோவும் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலானது.

உன்னி முகுந்தனை பாராட்டிய மோகன்லால்!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தை மோகன்லால் பாராட்டியுள்ளார்.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேதி வெளியானது.அதிக வ... மேலும் பார்க்க

இயக்குநர் ராமின் புதிய படம்!

இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான கதைகளை அழகுடன் அழுத்துமான மொழியில் பதிவு செய்யும் இயக்குநர்களில் ஒருவர் ராம்.கற்றது தமிழ், தங்க ம... மேலும் பார்க்க

பாட்டல் ராதா டிரைலர்!

குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.பரியேறும் பெருமாள் படத... மேலும் பார்க்க

‘தல வந்தா தள்ளிப்போகணும்...’ டிராகன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே ... மேலும் பார்க்க

பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவரா? வெளியான தகவல்!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது.... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் தனுஷ் - வெங்கட் அட்லூரி! படத்தின் பெயர் இதுவா?

நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மே... மேலும் பார்க்க