10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போதைப்பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் நாஷா முக்த் பாரத் அபியான் கூறுகளின்கீழ் அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்திலும், போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பொது மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த விருப்பம் மற்றும் அனுபவம் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது. கருத்துருக்களை மே 25-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609305 நேரில் வந்து கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04364-212868 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.