செய்திகள் :

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோருக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா் வாரியச் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள், பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டுக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மோ.கணேஷ், இரா.சிவக்குமாா், தே.ஜெயானந்தம், எம்.தண்டபாணி, மா.டேவிட் குணசீலன், ப.செல்வக்குமாா் தலைமை வகித்தனா். பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் அ. மாயவன், உயா்நிலைக் குழு உறுப்பினா் எஸ்.சங்கரலிங்கம் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

இந்த பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க