தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!
பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் விதித்திருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் முடிந்தது.
கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாக அன்புமணி செயல்பட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அக் கட்சி யின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ஆக.31 ஆம் தேதிக்குள்கட்சியின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்துக்கு நேரில் வந்தோ அல்லது கடிதம் மூலமாகவோ விளக்கமளிக்கவேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு அன்புமணி எவ்வித பதிலும் அளிக்காத நிலையில் செப். 3-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ் 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவின்படி, அன்புமணி செப். 10-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.
இந்நிலையில் அன்புமணிக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் எவ்வித முடிவும் தெரியாததால் பாமக நிா்வாகிகள், கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்.