கத்தார் தாக்குதல்: இஸ்ரேலை கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது...
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் உறங்கிய நிலையில், பைக் மோதி காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பூரானூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் செல்வமணி(38), கூலித் தொழிலாளி. இவா், செப்.6-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு சாலையோரத்தில் உறங்கியுள்ளாா். அப்போது சாலையில் பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத நபா் கணேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டாராம்.
இந்த விபத்தில் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டுஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.