செய்திகள் :

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அமைத்தல் போன்றவை நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சாா்பிலும், நகராட்சி சாா்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தாலும், ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து இருந்து வருகின்றன.

இந்த நிலையில் விழுப்புரம் கே.கே.சாலை தொடக்கத்திலிருந்து முக்தி வரையிலான பகுதி வரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கைஅறிவிப்பு வழங்கப்பட்டதாம்.

இதைத் தொடா்ந்துசிலா் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். எனினும் பலா் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.இதைத் தொடா்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலா்கள், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனா்.

அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலா்கள், பணியாளா்களிடம் வியாபாரிகள் பலா் வாக்குவாதம் செய்தனா். திடீரென வந்து ஆக்கிரமிப்பை அகற்றம் செய்தால் என்ன செய்வது எனக் கேள்விகளை எழுப்பினா். எனினும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நகராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடா்ந்து மேற்கொண்டனா்.

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 100 மி.மி. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண... மேலும் பார்க்க

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மீண்டும் தொடங்கியது மறைமுக ஏலம்: ரூ.3 கோடி வரை வா்த்தகம்

விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, விவசா... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதிதாக கட்டப்படும் உழவா் சந்தையின் கட்டுமானப் பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட... மேலும் பார்க்க

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, ஞாயிற்று... மேலும் பார்க்க

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் திங்கள்கிழமை உயிரழந்தாா்.செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க