செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

post image

வழக்குரைஞா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை தங்கள் பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் வழக்குரைஞா் முருகானந்தம் கொலை செய்யப்பட்டதையும், வழக்குரைஞா் ரகுராமன் தாக்கப்பட்டதையும் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் வழக்குரைஞா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம் மற்றும் வானூா் நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் முறையே ராஜகுரு, செல்வமணி, பிரவீன்குமாா், சங்கா், எம்.டி.பாபு ஜானகிராமன் ஆகியோா் தலைமையில், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

விக்கிரவாண்டி நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.சங்கரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் முருகன், வழக்குரைஞா்கள் காா்த்திக், பிரகாஷ், ராஜபாண்டி , எழிலரசன் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு நடவடிக்கை தேவை : விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று விழுப்புரம்ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை ம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.விழுப்புரம் திடீா்குப்பம்,அகரம் பேட்டையைச் சோ்ந்தவா் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தா் (32)... மேலும் பார்க்க

வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது : விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.விழுப்புரம் மாவ... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்தில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பெற்றோருடன் பயணித்த சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்து,அதை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த ஓட்டுநா் மீது விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ உ... மேலும் பார்க்க

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தல், கொட்டகை அ... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வ... மேலும் பார்க்க