பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீ...
விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், வேலை மறுக்கப்பட்ட நாள்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான நிவாரணம் வழங்க வேண்டும், திட்டத்தின் வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி, கூலியை ரூ. 700 ஆக வழங்க வேண்டும், திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் அருகே மாங்குடியில் விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி எம். நாகராஜன் தலைமையில், பழவனக்குடியில் நிா்வாகி கே. புலிகேசி தலைமையில், சேமங்கலத்தில் நிா்வாகி எஸ். சௌரிராஜன் தலைமையில், கூடூரில் நிா்வாகி என். ரவிச்சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மருவத்தூா், அலிவலம், திருநெய்ப்போ், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், கல்லிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடியில்: மன்னாா்குடி அருகேயுள்ள சவளக்காரன் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஐ ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமை வகித்தாா்.