செய்திகள் :

விவசாயம் செய்ய 90 நாள்கள் பரோல் பெற்ற கொலை குற்றவாளி!!

post image

விவசாயம் செய்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிக்கு90 நாள்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

2014ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ள சந்திரா, பரோல் கேட்டு பெங்களூரு மத்திய சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சித்ததேவரஹள்ளி கிராமத்தில் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்பார்வையிட வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் தனக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிக்க : புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய்!!

கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட மனுவை சிறைக் கண்காணிப்பாளர் நிராகரித்த நிலையில், உயர்நீதிமன்றத்தை சந்திரா நாடினார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரர் கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார், அவருக்கு இதற்கு முன்னதாக பரோல் அளிக்கப்பட்டதில்லை. ஆகையால் அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், பரோல் காலத்தில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும், வாரத்தின் முதல் நாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், இந்த கட்டுப்பாடுகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்து செய்யப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்துக்கு இயக்குநரான சாரா டெண்டுல்கர்!

இந்தியாவின் லெஜெண்டரி கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட்டில் 15, 921 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களும் குவித்து உலக சாதனை படைத்துள... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!

அஸ்ஸாம் மாநிலத்தில் உணவகம், விடுதி உள்ளிட்ட பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித... மேலும் பார்க்க

சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேச காவல்துறையின் சிஐடி பிரிவு கூடுதல் தலைவர்(ஏடிஜிபி) பொறுப்பிலிருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி என். ச... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் கைது!

அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!

தெலங்கானாவில் புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 55 ஆண்டுகளில் அப்பகுதியில் 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும். தேசிய நிலஅதிர்வு மையத்தின்படி, தெலங்கானாவின் முலுகு மாவட... மேலும் பார்க்க

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க