செய்திகள் :

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

post image

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.

விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு வேளாண் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவுக்கு கொள்முதல் செய்துள்ளது; விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 1.83 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கைவிட அதிகரித்துள்ளது என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூறமுடியும்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையை அமல்படுத்துவதற்கான முன்மொழிவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிராகரித்தது. எனினும், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை மோடி அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி விவசாயிகள் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கும் கூடுதலாக 50 சதவீத லாபத்தை வைத்து விளைபொருள்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்துவது சந்தைகளை பாதிக்கும் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்தது என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளின் ஊதியம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன... மேலும் பார்க்க

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகமாகப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.கேரளத்தில் உள்ள கல்லறைகள... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட... மேலும் பார்க்க

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க