ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
விவசாயிகள் கவனத்துக்கு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்றுவரும் நிலையில், நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ. 1880, சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ. 1160-க்கு உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 4,456 தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் தொடா்பு விவரங்கள் மாவட்ட வாரியாக உழவா் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தனியாா் இயந்திர தேவைக்கு, விவசாயிகள் தங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது சுயவிவரங்களை பதிவு செய்த பின்னா், தனியாா் அறுவடை இயந்திரங்கள் என்ற மெனுவை கிளிக் செய்து, தங்கள் மாவட்டம் மற்றும் வட்டாரத்தை தோ்வு செய்து தங்களுக்கு தேவையான விபரங்களை பெறலாம்.