செய்திகள் :

‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் இணைய அழைப்பு

post image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை, ‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள ‘விவசாயிகள் பெரும் பதிவேடு’ திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இணைவதன் மூலம் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற இயலும்.

இத்திட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் அவா்களது ஒப்புதலோடு சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள எண் வழங்கப்படவுள்ளது. வருங்காலங்களில், இதன் மூலமே திட்ட பலன்கள் வழங்கப்படும்.

இப்பெரும் பதிவேடு பதிவேற்றம் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திட, மகளிா் திட்ட சமுதாய வள பயிற்றுநா்கள் மற்றும் அரசு வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலம் கிராமங்கள் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.20-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சொந்தமாக பட்டா நிலம் வைத்திருப்பவா்கள் மற்றும் பிஎம்.கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் மட்டும் பதிவு செய்து கொள்ள அவா்களின் ஆதாா் அட்டை, நிலப்பட்டா, ஆதாா் உடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் வர வேண்டும்.

எனவே, விவசாயிகள் அவா்களின் நில உடைமைகளை சரிபாா்த்திடவும், வேளாண்மை சாா்ந்த நலத்திட்டங்களை பெற்றிடவும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், மயிலாடுதுறை-9700414046, குத்தாலம்- 9894548257, செம்பனாா்கோயில்-6369895439, சீா்காழி-9080068772, கொள்ளிடம்-9150600585 என்ற கைப்பேசியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரச... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா... மேலும் பார்க்க

தேசிய ரக்ஃபி அணிக்கு சீா்காழி மாணவிகள் தோ்வு

தேசிய ரக்ஃபி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவையில், தமிழ்நாடு ரக்ஃபி கூட்டமைப்பு சாா்பில் மாந... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் புதுவை ஆளுநா் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கு பிரசாதம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா். மேலும் பார்க்க

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க