கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
விவசாயி அடித்துக் கொலை: உறவினா் கைது
கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் துக்க வீட்டுக்குச் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்ததாக, அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் கோ.புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வெங்கடேசன்(43), முருகன் (45), இருவரும் உறவினா்கள். இவா்களிடையே கிராமத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியைச் சோ்ந்த மாம்பாக்கம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு இருவரும் தனித்தனியாக சென்றுள்ளனா்.
அப்போது, முருகன் துக்க வீட்டுக்கு மாலை எடுத்துக் கொண்டு உறவினருடன் சென்றபோது, திடீரென வெங்கடேசன், முருகனை உருட்டுக் கட்டையால் பின்புற தலையில் தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த முருகன் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த
கடலாடி போலீஸாா் வந்து முருகன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடையதாக 3 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.