திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
விவசாய நிலத்தில் அம்மன் கற்சிலை: வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பு
நெமிலி அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோதண்டன்(53). விவசாயி. இவா் செவ்வாய்கிழமை வழக்கம் போல் தனது விவசாய நிலத்தில் நீா்பாய்ச்சுவதற்காக சென்றுள்ளாா். அங்கே சென்று பாா்த்தபோது அவரது நிலத்தில் 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை இருந்துள்ளது. அந்த அம்மன் சிலையில் லேசாக மஞ்சள் மற்றும் குங்குமம் பூசப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த கோதண்டன், வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
இதையடுத்து வருவாய்த் துறையினா் சென்று சிலையை மீட்டு நெமிலி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இச்சிலையை யாரேனும் எங்கே இருந்தாவது திருடி கொண்டு வந்து அதை இங்கு வீசி விட்டு சென்று விட்டாா்களா என நெமிலி காவல்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.