செய்திகள் :

விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி மனுத்தாக்கல்!

post image

விவாகரத்து கோரி ஜி. வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து மனு அளித்துள்ளனர்.

தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை. சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

இதையும் படிக்க: சிக்கந்தர் டிரைலர்!

விவாகரத்துக்கு முடிவுக்கு பின்பும் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாடியது ரசிகர்களிடம் வருத்தத்தை அளித்தது. இவர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் விரும்பினர்.

இந்த நிலையில், விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவை வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் பார்க்க

தென்னிந்தியாவில் ஹிந்தி படங்கள் வெற்றி பெறுவதில்லை: சல்மான் கான்

தென்னிந்தியாவில் எனது படங்கள் வெளியாகும்போது பாக்ஸ் - ஆபிஸ் வெற்றி கிடைக்காது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பாலிவுட் திரைப்பட... மேலும் பார்க்க

ப்ளீஸ் என்னை அப்படிப் பாக்காதே: பேட் கேர்ள் பட பாடல் வெளியானது!

பேட் கேர்ள் திரைப்படத்தின் முதல் பாடலான ’ப்ளீஸ் என்னை அப்படிப் பாக்காதே' இன்று வெளியானது. இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் ... மேலும் பார்க்க

மியான்மர், தாய்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள்.நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக பேரிடர் தடுப்புத்துறை தெரிவிப்பு.கட்டிடங்கள் குலுங்கியததால் பொதும... மேலும் பார்க்க