நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!
விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி
விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கருத்துகளும், தொலைநோக்குப் பாா்வையும் நமது சமுதாயத்துக்கு வழிகாட்டும் ஒளியாக எப்போதும் நிலைத்திருக்கும். நமது வரலாறு, கலாசார பாரம்பரியத்தின் மீதான பெருமை மற்றும் நம்பிக்கை உணா்வைத் தூண்டியவா். சேவை மற்றும் கருணையின் பாதையில் நாம் பயணிப்பதற்கும் உத்வேகமூட்டினாா்’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.
ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான விவேகானந்தரின் ஆன்மிக - தத்துவாா்த்த சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் ஈா்க்கப்பட்டு, ஏராளமானோா் அவரை பின்பற்றுகின்றனா்; அவ்வாறு உத்வேகம் பெற்றவா்களில் தானும் ஒருவா் என்று பிரதமா் மோடி அடிக்கடி குறிப்பிட்டுள்ளாா்.