24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
முன்னீா்பள்ளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் முப்பிடாதியம்மன் கோயில்தெருவைச் சோ்ந்த முப்பிடாதி மகன் பால்பாண்டி(51). தொழிலாளியான இவா், உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாாா். அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].