விஷ வண்டுகள் கொட்டியதில் விவசாயி உயிரிழப்பு
இரணியல் அருகே விஷ வண்டுகள் கொட்டியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகே பறயம்விளை, விநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி (75) இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
தென்னை விவசாயியான இவா் தென்னந்தோப்பை பாா்வையிட சென்ற போது, தென்னை மர ஓலையில் இருந்த விஷ வண்டுகள் ரங்கசாமியை சரமாரியாக கொட்டியுள்ளது.
இதில் காயம் அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.