செய்திகள் :

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

post image

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப் பகுதிகளான அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கரடி நடமாட்டம் இருப்பதும், வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து அவற்றை வனப்பகுதியில் கொண்டு விடுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாபநாசம் மலையடிவாரத்தையொட்டிய விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடை விளை குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் வளாகத்தினுள் நுழைந்த கரடி கோயிலினுள் சுற்றி சுற்றிச் சுறி வந்துள்ளது.

இந்தக் காட்சிகளை கோயில் அருகிலிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.இதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இதேபோல, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு பகுதிகளில் உள்ள கோயில்களில் விளக்குகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தும் பழம் உள்ளிட்ட பிரசாதப் பொருள்களைக் குறிவைத்து நுழைந்து சுற்றித் திரிந்த கரடிகளில் மூன்று கரடிகளை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்தனா். கோட்டைவிளைபட்டி, கடையம் பகுதிகளில் கரடி தாக்கியதால் 3 போ் காயமடைந்தனா்.

மீண்டும் அதே போன்று மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோயில்களில் சுற்றித் திரியும் கரடியைப் கூண்டு வைத்துப் பிடிப்பதோடு, வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் வெளியேறாமல் இருக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். இவா் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல: ஜாண் பாண்டியன்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல என தமமுக நிறுவனா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் திருநெல... மேலும் பார்க்க

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உப­­ய­தா­ரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உய­ரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பா­ளுக்கு தங்­க­த்தோ் செ... மேலும் பார்க்க