டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை வெள்ளலூா் இவிபி தலைவா் காலனியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கோபி (39). அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இவருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், கோபி தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சியில் தங்கியிருந்தாா். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கோபி கோவையில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை வந்தாா். அங்கு தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 7 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி அளித்த புகாரின்பேரில், போத்தனூா் காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.