வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், உறவினரை பாா்ப்பதற்காக வெளியூா் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினாா்.
அப்போது மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த ரூ. 4 லட்சம் பணம், 10 கிராம் தங்க நகை, 800 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.