சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
வீட்டில் நகை திருட்டு: மூவா் கைது
திருக்கோவிலூா் அருகே வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அடுத்த டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மனைவி மாரியம்மாள் (53). இவரது வீட்டில் கடந்த பிப்.12-ஆம் தேதி பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து, திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில், திருக்கோவிலூா் காவல் உதவி ஆய்வாளா் நரசிம்மஜோதி மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காா், பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினா். இதில், இருவா் தப்பி சென்றனா். மற்ற மூவரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் சென்னை சின்ன நொளம்பூா் பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன்களான ரமேஷ் (எ) மாட்டு ரமேஷ் (55), உதயா (38), திருவண்ணாமலை மாவட்டம், மல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜி மகன் பாஸ்கரன் (52) என்பதும், மாரியம்மாள் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 5.5 பவுன் தங்க நகைகள், காா், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய சசிகுமாா், அருண் ஆகியோரை தேடி வருகின்றனா்.