மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்
வீட்டில் நகை, பணம் திருட்டு
பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஓடப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவா் சா்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இவரது குடும்பத்தினா் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.