செய்திகள் :

வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக, மூவா் குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.

இந்தக் குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அண்மையில் அறிக்கையை சமா்ப்பித்தது. தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 50-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்தது. யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததாக அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இக்குழு உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், துறைசாா் விசாரணை நடைமுறைகளின்படி, மூவா் குழுவின் அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளாா்.

முன்னதாக, இயற்கை நீதி கோட்பாட்டின்கீழ் விசாரணைக் குழுவின் அறிக்கை நகலை நீதிபதி வா்மாவுக்கு அனுப்பி, அவரிடம் தலைமை நீதிபதி பதில் பெற்றிருந்தாா்.

துறைசாா் விசாரணை நடைமுறைகளின்கீழ், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நீதிபதியை தாமாக பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுரை வழங்குவாா். நீதிபதி பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையைத் தொடங்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பரிந்துரை கடிதம் அனுப்புவாா். அதன்படி, தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பிப்பாா்.

பண சா்ச்சையைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க